அணி சபை கூடுகை


இயேசுவில் மிகவும் பிரியமானவர்களே,
இந்தியாவை இயேசுவுக்கு சொந்தமாக்கும் முயற்சியில் கர்த்தர் தமக்கென்று சாத்தானோடும் அவனுடைய ராஜ்யதோடும் யுத்தம் செய்ய ஒரு சேனையைத் திரட்டுகிறார். இந்த யுத்தப்படையில் முன்னணி வீரர்களாக, வீராங்கனைகளாக உங்களை பெயர் எழுதிச் சேர்த்துகொள்ள ஒப்புகொடுத்தமைக்கு பாராட்டுகள். நீங்கள் அறிந்திருக்கிறபடி,

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபே 6:12

இயேசுகிறிஸ்துவின் படையணி வீரர் ஒவ்வொருவரும் தான் ஏற்றுக்கொள்ளும் 4 முக்கியமான கடமைகளை உங்களுக்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

1. போர்வீரனின் கடமைகள்
  • 1. 2.30 மணி நேரம் ஒவ்வொரு நாளும் ஜெபித்தல் (பாதுகாப்புக்காகவும் தன் தளபதி கர்த்தரிடமிருந்து கட்டளைகள் பெற்றுகொள்ளவும்)
  • 2. வாரம் ஒரு முறை அணி சபை நடத்துதல் அல்லது கலந்துகொள்தல்
  • 3. ஒவ்வொரு நாளும் இருவருக்கு நேரடியாகவோ, மெயில்/தொலைபேசி மூலமோ சுவிசேஷம் அறிவித்தல் (இயேசுவை அறியாத ஒருவருக்கு அறிமுகப்படுத்துதல் அல்லது அன்றைய மன்னா வசனத்தினால் 2 கிறிஸ்தவ விசுவாசிகளை உறுதிப்படுத்துதல்)
  • 4. 2 மாதங்களுக்குள் ஒரு புதிய அணியைத் தொடங்குதல்
  • 5. Trans India project :

உங்கள் அணிக்கூட்டம் முடிந்ததும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை படிவத்தை பூர்த்தி செய்து heavenlyhostofjesus@gmail.com மெயில் ID யில் அனுப்பி வையுங்கள்.
இதை அனுப்ப மறக்கவேண்டாம்.


10 அணி வீரர், வீராங்கனைகளும் கீழ்க்கண்ட பத்தில் ஒன்றை முறை வரிசைப்படி செய்ய வேண்டும்.

1. வரவேற்பு, அறிமுகம் - 1 min.
2. துவக்கஜெபம் - 2 min.
3. உறுதிமொழி (2கொரீ 10:3-5 ) - 2 min.
4. ஆராதனை - 30 min.
5. தேவ செய்தி - 30 min.
6. அணி வீரர்களுக்காக வீர்னக்கனைகளுக்காக செபித்தல் - 20 min.
7. கடந்த வாரத்தின் சாட்சிகளைப் பகிர்ந்துகொள்ளுதல் - 20 min
8 அடுத்த வார அணிக்கூட்டதிற்காக திட்டமிடுதல் - 5 min
9. இறுதி ஜெபம், (சங் 144:1) - 2 min
10. அறிக்கை தயாரித்தல் அனுப்புதல் - 5 min

பகிந்துகொள்ளுதலின் போது தனிஜெபம் 2.30 மணி நேரம் செய்வது பற்றி எல்லோரும் தவறாமல் பகிர்ந்துகொளும்படி தலைவர் வலியுறுத்தவேண்டும்

உறுதி மொழி II கொரிந்தியர் 10 அதிகாரம்
  • 3. நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.
  • 4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
  • 5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். (2கொரி10:3-5)

    இறுதி ஜெபம்: சங்கீதம் 144 அதிகாரம் 1. என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . ஆமென்.அல்லேலுயா (சq; 144:1).
  • TC GATHERING
    அணி சபை கூடுகை
    படிவத்தைப் பதிவிறக்கவும்
    TC Message
    அணி சபை செய்தி
    படிவத்தைப் பதிவிறக்கவும்