ஏண்
|
வாரம்
|
வேதப் பகுதி
|
1
|
வாரம் 1
|
எசேக். 37:1-14. உலர்ந்த எலும்புகளிலிருந்து கர்த்தர் ஒரு சேனையை எழுப்புகிறார். முற்றும் தகர்ந்து , நம்பிக்கையற்று நொடித்துப் போயிருந்த இடத்தில் புதிய உயிர் துளிர்க்கிறது. எசேக்கியேல் உலர்ந்த எலும்புகளுக்கு தீர்க்கதரிசனம் சொன்னதுபோல, உங்கள் உடலின் நோயுற்ற பகுதிகளுக்கு தீர்க்கதரிசன்ம் கூறுங்கள்! நரம்புகள், எலும்புகள், லிகமென்ட்ஸ், தசை, தோல், உடலின் எல்லா உறுப்புகளுக்குள்ளும் தேவனின் சுவாசம் பாய்கிறது!
உங்கள் ஆத்துமாவுடன் பேசுங்கள்! சித்தம், புத்தி, ஞாபகம், (மனச்சோர்வு, குற்ற உணர்வு, வெட்க உணர்வு, கைவிடப்பட்ட நிலை, தனிமை, தாழ்வு மனப்பான்மை, சுய மதிப்பின்மை, உயர்ந்த இலட்சியமின்மை, தரிசனமின்மை, வெறுப்பு, கசப்பு, பொறாமை, சுய பெருமை, வீண் பெருமை, போட்டி மனப்பான்மை, பிறரை குற்றம் கண்டுபிடித்தல், பாகுபாடு, மதப்பற்று, இச்சை, பாவ வாழ்க்கை, பிறரை தரம் தாழ்த்தல், போன்றவை…) தேவனின் சுவாசம் உட்புகும் போது இவை கரைகின்றன. உங்கள் ஆவியோடு பேசுங்கள். கீழ்க்கண்டவைகளுக்கு கட்டளை கொடுத்து வரவழையுங்கள் உற்சாகம், நம்பிக்கை, சந்தோஷம், விசுவாசம், ஜெப உணர்வு, ஜாக்கிரதை, நேரத்தை பிரயோஜனப்படுத்துதல், முதலியன. ….
நீங்கள் இன்றுவரை புதைக்கப்பட்டிருந்த பல கல்லறைகளிலிருந்து வெளியே வருவதை காண்பீர்கள்.
பகை, மன்னியாமையின் கல்லறை, வெறுப்பு, நம்பிக்கையின்மை ஆகிய கல்லறைகளிலிருந்து வெளியேறினீர்கள்! இயேசு உங்களுக்கு புது வாழ்வு தந்துவிட்டார்.!
|
2
|
வாரம் 2
|
மாற்கு 16:17-18, மத் 10:1, லூக். 9:1, 10:19. ஒரு விசுவாசியில் கீழ்க்கண்ட5 வித அடையாளங்களால் அறியப்படுவர்.
- பிசாசுகளை துரத்துதல்
- நவமான பாஷைகளைப் பேசுதல்
- சர்ப்பங்களை கையால் எடுத்தல், சாத்தானின் செயல்கள் அத்தனையும் நசுக்கிப்போடுதல்,
- கொல்லும் நஞ்சை குடித்தாலும் உடலுக்கு எந்த தீங்க்கும் விளையாது.
- நோயாளிகளை சொஸ்தமாக்குதல்.
இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து இந்த அடையாளங்கள் காணத்தொடங்கும்.
ஒரு குழந்தை பள்ளியில் சேர்ந்து அ,ஆ, இ, ஈ, உ எழுத்துக்கள் படிப்பது போன்று ஒரு விசுவாசியில் உடனே இவ்வடையாளங்கள் காண கிடைக்கும்.
அணிசபையின் இரண்டாவது கூடுகையில் இதை செயல்படுத்த ஆரம்பிக்கவேண்டும். அணியினருக்காக ஜெபிக்கும்போது நோயாளிகள் இருந்தால், ஒருவர் ஒருவருக்காக கைவைத்து ஜெபிப்பார்கள், சுகம் கிடைக்கும். இரண்டாவது வாரம் முழுவதும் வெளியிலும், மருத்துவமனைகளுக்குச் சென்றும் இந்த செய்முறை பயிற்சியை எல்லோரும் செய்ய வேண்டும். நோய்களுக்கு கட்டளை கொடுத்து விரட்டி, நோயாளிகளை சுகப்படுத்தின சாட்சிகளை அணியினர் எல்லோரும் மூன்றாம் கூடுகைக்கு வரும்போது பகிர்ந்துகொள்ளவேண்டும்
|
3
|
வாரம் 3
|
ஒரு போர்க் குதிரையாக மாறுதல். ஒரு விசுவாசி யுத்தம் செய்ய பழகின ஒரு போர்க்குதிரையாக மாறவேண்டும். சக். 10:3. இயேசு தன் சீடரை எதிரியுடன் யுத்தம் செய்ய பயிற்றுவிப்பார்.
ஒரு விசுவாசியின் அதிகாரம் –
மனிதன் பூமியும் அதிலுள்ள சகலத்தையும் ஆளுகை செய்ய சிருஷ்டிக்கப்பட்டவன். ஆதி 1:26-28
பாவத்தினால் அவன் அதை இழந்த போதிலும், (ஆதி 3), இயேசு தன் மரணத்தினாலும் உயிர்ப்பினாலும் இழந்தவற்றையெல்லாம் மீண்டும் பெற்றுத் தந்தார். எனவே இப்பொழுது கீழ்க்கண்டவைகளுக்கு மனிதன் அதிகாரத்துடன் கட்டளை கொடுக்க முடியும்.
சூரியன், சந்திரன் மற்றும் இயற்கை சக்திகள். யோசுவா10:12-14,
மலைகள், பர்வதங்கள், மாற்கு 11:23-24, ஏசா 41:15,16, எசேக்கி 36:1-8
எல்லாவித நோய்கள், பேய்கள். மத் 10:1, லூக். 9:1, 10:19, 9:6, அப் 3:1-
அணி சபையில் ஒவ்வொரு போர்வீரனும் யுத்தக்குதிரையை போன்றுப் போர் செய்ய பயிற்றுவிக்கப்படவேண்டும். சாத்தான் தன் குடும்பத்தில், ஊரில், தேசத்தில் கைப்பற்றிவைத்திருக்கும் அத்தனையும் பறித்தெடுக்கவேண்டும். தேசத்திலிருந்து அவனை துரத்தவேண்டும். பயம் தெளிந்த வீரனாக மாறவேண்டும். யோபு 39:19-25, யோவேல் 2:4-10, 3:10, 2 திமோ 1:7
அணி சபை வீரர்கள் அத்தனை பேரும் சர்வாயுத வர்க்கம் தரித்துகொள்ள வேண்டும். எபே 6:10-16
|
4
|
வாரம் 4
|
சீடராக்குதல் - மத் 28:19,20 - இயேசுவின் இறுதி கற்பனை, வேதத்தின் மிகப்பெரிய கட்டளை, மறக்கப்பட்ட கட்டளை! இதை நிறைவேற்ற தயாரித்தல் .
இயேசுவின் உத்தம சீடனாக மாறுவது - சீடரை உருவாக்குதல் – சீடர்களை உருவாக்காதவன் இயேசுவின் சீடனல்ல; யோவான் 15:8 மிகுந்த கனி கொடுத்தல் – ஆத்துமாக்களை அறுவடை செய்து, அவர்களை சீடராக மாற்றுதல்.
உருவாகு, உருவாக்கு பயிற்சியை அறிமுகம் செய்தல் – அணிவீரர்கள் இப்பயிற்சி பெற தூண்டுதல், ஏற்பாடு செய்தல், சீடராக மாறுவதற்கு செலுத்தவேண்டிய கிரயம் – லூக் 14:25-33.
இயேசு தன்னுடன் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை! தன்னை ராஜாவாக்க வந்தவர்களை விட்டு விலகியோடி அவர் மறைந்துவிட்டார். கூட்டத்தை கலைத்துவிடுவதற்கான வழிவகைக்ளைத் தேடினார். (மத். 14: 22, 23)
|
5
|
வாரம் 5
|
இந்தியாவில் விசுவாசிகளுக்கு காலவரையறையுடன் திட்டம் ஒன்றை தேவன் கொடுத்துள்ளார். “இந்தியா பற்றிய தரிசனத்தை” அறிமுகப்படுத்தவும். எவ்வாறு இந்தியா பிற உலகநாடுகள் மேல் சுயாதீனம் செலுத்தப்போகிறது என்பதை விளக்கவும். இந்தியா அனைத்து உலக நாடுகளுக்கும் ஒளியாக மாறும்.
மாதிரி சபை பற்றிய தரிசனத்தை விளக்கவும்.
நிறுவன சபைகள் இயேசு கொடுத்த மிகப்பெரிய கட்டளையை நிறைவேற்ற எப்படி தவறிவிட்டது என்பதை விளக்கவும்.
இதுபற்றி தேவன் சபைகளுக்கு கொடுத்த எச்சரிப்புகள்!
- முதல் எச்சரிக்கை – 30.11.2006- மாதிரி சபை (புத்தகம் வழங்கப்படலாம் ). சபைகளுக்கு அவசர சட்ட காலம் பிறப்பிக்கப்பட்டது 2010-2013. (நான்கு ஆண்டுகள்)
- 2-ம் எச்சரிக்கை – 19.8.2013 - ஆப்பரேஷன் எக்ளேஷியா (புத்தகங்கள் கொடுக்கப்படலாம் )
- 3-ம் எச்சரிக்கை –27.10.2014 (7 அம்ச திட்டம் (ஆப்பரேஷன் எக்ளேஷியாவின் இறுதி பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது )
- நிராகரித்தல் – 10.10.2015 .
சீடர்களை உருவாக்க தவறியதால் கி.பி. 300 க்கு பின் எவ்வாறு கிறிஸ்தவம் ஒரு மதமாக மாறிவிட்டது என்பதை விளக்கவும். இயேசுவின் மிகப்பெரிய கட்டளையான மத் 28:19,20 ஐ எவ்வாறு நாம் நிறைவேற்றுகிறோம் என்பதைப் பொறுத்து தான் இயேசுவின் 2-ம் வருகையின் காலம் அமைந்துள்ளது. ரோம . 10:9-14.
இவ்வணி உறுப்பினர்கள் இன்னும் 3 வாரங்களுக்குள் 10 புது உறுப்பினர்களை கண்டுபிடித்து புது அணி தொடங்கவேண்டும்
|
6
|
வாரம் 6
|
வேதத்தின் 2 மிகப்பெரிய கட்டளைகள் – - தேவனை நேசித்தல்,
- அயலானை நேசித்தல்.
தேவனை நேசித்தல் :
யாத் 20:4-5, உபா 5:7-10, லேவி 19:4; யாத் 20:23, 23:24, 34:17; உபா 4:16-19, 5:8-9, 16:21-22, 27:15; சங்97:7, 115:4-8; ஏசா 2:20, 44:9-20, 48:5-8; எரே 10:3-8; அப் 17:29; ரோமை 2:22-23; 1 கொரி 10:19-20; வெளி 13:14-15, 22:15
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக என்பது தேவனுக்குரிய இடத்தில் வேறு எதையும் யாரையும் வைக்காமலிருப்பது – எல்லாவித அந்நிய தெய்வ வழிபாடுகள், மனித தெய்வ வழிபாடுகளிலிருந்து விலகி இருப்பது – மேஜிக், குறி கேட்பது, ஜோசியம், கண் ஜோதிடம், நாடி ஜோதிடம், பல்லி ஜோதிடம், நாள் பார்ப்பது, மை பார்ப்பது, மந்திரக்கயிறு , கால்நடை பயணம் போவது, மலை ஏறுவது, கடலில் குளிப்பது, தீர்த்தம் குடிப்பது, மணி மாலைகள் அணிவது, நட்சத்திர பலன், ராசிபலன், யோகா, கைரேகை, கணிதஜோதிடம் ( “உன் சத்துருவை அறிந்துகொள்” டிவிடி யை அறிமுகம் செய்யலாம்) ரேக்கி, ப்ராணிக் ஹீலிங், மந்திரவாதம், சூனியம், அவுஜா போர்ட், போன்றவை.
அயலானை நேசிப்பது:
மாற்கு 12:30-33, உபா: 6:4, 10:12, 30:6, நீ.மொ 23:26, மத் 10:37, லூக் 10:27, 1 திமோ 1:5, மத் 22:37-39, லேவி 19:13, மத் 7:12, ரோமை 13:8-9, 1 கொரி 13:4-8, கலா 5:14, யாக் 2:8, 12-13, 1 யோ 3:17-19, 4:7-8, 21, மத் 5 முழுவதும்.
நாம் நம் சகோதரை உண்மையாகவே நேசித்தோம் என்றால், அதை வெளிக்காட்டுவதற்கான சிறந்த வழி இயேசுவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, சீடராக்கி, அதனால் நித்திய ஜீவனுக்கு அவர்களை உரிமையாளர்களாக்குவதே.
10 பேர்களை கண்டுபிடித்து, புதிய அணி தொடங்க இடத்தையும் ஆயத்தப்படுத்தவும். இதற்காக ஜெபித்தல். புதிய அணிக்கான படிவத்தை பூர்த்தி செய்து விசுவாசத்தில் 10 பேர்களின் பெயர்களை எழுதி, எசேக் 37:4-6 தீர்க்கதரிசனம் உரைத்தல்
|
7
|
வாரம் 7
|
புதிய ஏற்பாட்டில் ஆராதனை என்பது என்ன? சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது – ரோமை 12:1-2.
மனிதர்கள் எல்லோருக்குள்ளும் காணப்படும் ஒரு ஆர்வம் தங்களை படைத்தவருக்கு எதாவது காணிக்கை செலுத்தவேண்டும் என்பது. பல மதங்களில் பலவித வழிபாடுகளை காண்கிறோம். பூக்கள், பழங்கள், தூபம், விளைச்சலின் முதற்பலன், முடி, மிருகங்கள், திராட்சை இரசம் ஆகிய பல பொருட்கள். இவைகளைக்குறித்து தேவன் சொல்வது என்ன?
10. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
12. நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்;
சங். 50 :10-12
பழைய ஏற்பாட்டில் காணிக்கையாக, குருடு, முடம், நசல் கொண்டவைகளை செலுத்தியபோது தேவன் அவர்களை கண்டித்தார். அவர்களின் ஆசீர்வாதங்களை சபித்தார். மலாக்கி: 1:6,8,11, 2:1-3.
நமது சரீரம் கறையற்ற காணிக்கையாக ஒப்புகொடுக்கப்படவேண்டும். அதை ஒப்புகொடுக்குமுன் ஒவ்வொரு உறுப்பாக சோதனை செய்வோமா? என் கண்கள் பரிசுத்தமுள்ளவைகளா? மத் 5:27-2
என் நாவு புரட்டுநாவா? பரிசுத்தமுள்ளதா? மத் 5: 22, 12:36, யாக் 3:2, 5-6, 8-11.
மிருகங்களை காணிக்கையாக ஒப்புகொடுத்தபோது, அதை சந்து சந்தாக வெட்டி, பலியிட்டார்கள். ஒரு அணு கூட உயிரோடிராதபடி, அத்தனை யும் தேவனுக்கு பலியிட்டார்கள். (லேவி 1:6)
அவ்வாறே நமது மாமிச உடலும் பூரணமாக ஒவ்வொரு உறுப்பும், சந்து சந்தாக வெட்டி தகன பலியாக செலுத்தப்படும் போதுதான் நமது மனம் புதிதாகி, நாம் மறுரூபமடைகிறோம். (ரோமை 12:2)
பலன்? தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தமும் இன்னதென்று பகுத்தறிய முடிகிறது. அநேகருக்கு இன்று தேவனுடைய சித்தம் வெளிப்படாமலிருக்க காரணம் அவர்களது காணிக்கை பூரணமானது அல்ல.
நாம் புதிய சிருஷ்டியாக மாறுவோம். (2 கொரி 5:17), உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல் இருப்போம்.(மத் 6, 7 அதிகாரங்கள் வாசித்து இந்நாட்களில் தியானம் செய்வது நல்லது).
|
8
|
வாரம் 8
|
ஒரு தலைவரின் கடமை – தங்கள் குருவை, ஆசிரியரை எல்லாவற்றிலும் பின் பற்றுவது - இயேசு, நமது குரு, ஆசிரியர், எனக்காக அடிமை ரூபம் பூண்டார். யோவான் 14:24 – மண்ணில் விதைக்கப்படும் விதையாக பூரணமாய் தம்மைத் தாமே சமர்ப்பித்தார். இயேசு தன் சீடர்களை கடைசி வரை நேசித்தார். யோ 13:1.
3 வருடங்களின் முடிவில், இயேசு தன் சீடர்களுக்கு அளித்த பயிற்சியை பார்த்தால், அது முடிவடையாதது போலவும், உலகத்தின் கண்களுக்கு தோல்வி போலவும் தெரியலாம். ஆனால் தான் உலகத்தை விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது என்று அவர் அறிந்து தன் சீடர்களை பிதாவிடம் ஒப்படைத்தார். யோ 17:1-26.
இயேசு சீடர்களுக்கு கொடுத்த பயிற்சியின் முடிவும் முற்றுப்புள்ளியும் தன்னை ஜீவபலியாக பிதாவிடம் ஒப்புகொடுத்ததே! பிலி 2:4-11.
புதிய அணியை தொடங்கும் முயற்சியில் , தாங்கள் எதிரிட்டு தோற்கடிக்கவேண்டிய 3 சத்துருக்களைக்குறித்து அணியினருக்கு அறிவுறுத்துதல்
- பிசாசு. 1 யோ 3:18. இயேசு சாத்தானை தோற்கடித்து சிலுவையில் வெற்றி சிறந்தார்.
- மாமிசம். கலா 5:17,18. நமது மாமிசமோ, உணர்வுகளோ, சித்தமோ அல்ல, பரிசுத்த ஆவியானவரே நமக்குள் தலைவராக இருந்து நம்மை நடத்தவேண்டும். – ரோமை 8:14
- உலகம். யாக் 4:4. லூக் 16;15
சாத்தான் மனிதனை சோதித்து விழத்தாட்ட பயன்படுத்தும் 3 முக்கிய ஆயுதங்கள்.
- பெருமை. ஏசா. 14: 13-15, யோபு 33:17, நீமொ 8:13, 11:2, 16:18, 29:23, மாற்கு 7:22, 1 யோ 2:16
தாழ்மை என்னும் ஆயுதத்தினால் பெருமையை மேற்கொள்தல். பிலி 2:3-11.
- பண ஆசை. 1 திமோ 6:6-10 , மாற்கு 6:24, லூக் 16:9, 11,13, 16:14, 2 திமோ 3:2, எபி 13:5
போதும் என்ற மனதுடனே கூடிய தேவ பக்தியினால் ப்ண ஆசையை மேற்கொள்ளவேண்டும். இயேசுவை முன்மாதிரியாக வைத்தல் நீமொ 10:22, லூக் 2:16, மத் 27:57-59.
- பாசபந்தங்கள்: லூக் 14:25,26, 9:23-26, 8:20,21, ஆதி 22:1,2.
மனிதர்கள், இடங்கள், பொருட்களுடன் நாம் வைக்கும் அதிகமான பற்று தேவனிடமிருந்து நம்மை பிரிக்கிறது. இந்த சோதனையை மேற்கொள்ளும்படி, தேவனுக்கு இருதயத்தில் முழு இடத்தையும் கொடுத்து, அதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்கிவிடுதல்.
இறுதிநாளில் அணியினருக்கான அபிஷேக ஜெபம்
புதிய அணிகளை தொடங்கிவைத்தல் புதிய அணியினரையும் அணிகளையும் இயேசுவுக்கு ஒப்புகொடுத்தல்.
|
|
|
|